சென்னையில் நேற்று (பிப்ரவரி 16) புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சியின்போது கலைஞர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுவார். அதன்படி நானும் அதே ஆசையில் தான் இருந்தேன்.
ஆனால் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் இன்னும் சில நாட்களில் ஒரு நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார். 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தக கண்காட்சி மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.