Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை (பிப்.18)…. இந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் (பிப்.19) அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (பிப்.18) தேர்தல் பயிற்சி வகுப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் தவிர மற்ற ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 50 சதவீதத்திற்கும் மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் நாளையும் (பிப்.18) பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (பிப்.18) விடுமுறை அளித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |