Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. கணவரின் வெறிச்செயல்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிங்கனூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஏழுமலை தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏழுமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |