லாரி டியூப்பில் மறைத்து வைத்து சாராய விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது லாரி டியூப்பில் மறைத்து வைத்து சாராய விற்பனை செய்து கொண்டிருந்த கருப்பன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 100 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.