Categories
தேசிய செய்திகள்

இந்திய கலாசாரத்திற்கு மாமல்லபுரம் தான் எடுத்துக்காட்டு…… காலண்டர் வெளியிட்ட மத்திய அரசு…!!

மத்திய அரசின் 2020க்கான புத்தாண்டு காலண்டரில் மாமல்லபுர காட்சிகள் இடம்பெற்று உள்ளன. 

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வ புத்தாண்டு காலண்டரை வெளியிடுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டுக்காண காலண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் திட்டங்கள், மக்களை ஊக்குவிக்கும் வகையில் வசனங்கள் போன்றவை அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை குறிக்கும் வகையில் மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் பிரதமர் மோடி சீன அதிபருடன் மாமல்லபுரத்தில் சுற்றுப்பயணம் சென்றபோது கடற்கரையில் நின்ற காட்சி மற்றும் அவர் வேட்டி சட்டையில் இருக்கும் முழு பட காட்சி ஆகியவையும் காலண்டரில் இடம் பெற்றிருக்கின்றன.

Categories

Tech |