அல்ஜீரியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7,500 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்பட உள்ளதாக அதிபர் அப்டெல்மத்ஜித் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அல்ஜீரிய என்ற ஆப்பிரிக்க நாட்டில் வேலையில்லாமல் அதிகமான இளைஞர்கள் திண்டாடி வருகிறார்கள். அவர்கள் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டின் அதிபர் அறிவித்திருக்கிறார்.
அதன்படி ஒவ்வொரு மாதமும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு 7,500 ரூபாய் உதவி தொகையாக கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.