Categories
தேசிய செய்திகள்

1,190இல் ஒரு ஊழல் புகார் கூட இல்லை…… பிரதமர் மோடிக்கு லோக்பால் CERTIFICATE….!!

பிரதமர் மோடி மீது எந்தவித ஊழல் புகார்களும் லோக்பால் அமைப்புக்கு இதுவரை செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டின் உயர் பதவிகளில் வகிப்போர் மீது கூறப்படும் ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் என்னும் அமைப்பு தொடங்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் லோக்பாலுக்கு 1190 புகார்கள் வந்துள்ளதாகவும் அவற்றில் 1,120 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி குறித்தும் மத்திய அமைச்சர்கள் குறித்தும் இதுவரை எந்தவித ஊழல் புகார்களும் லோக்பால் அமைப்பிற்கு செல்லவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Categories

Tech |