தங்கம் விலை மேலும் உயரும் என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியுடன் வேதனை அடைந்துள்ளனர்.
இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. இதனால் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ 456 உயர்ந்து 30,344_க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தின் இந்த தீடிர் விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வு குறித்து நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் கூறுகையில் ,
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்ததில் அங்கு உள்ள ராணுவ தளபதி உயிரிழந்துள்ளார். இது உலக நாடுகளிடையே ஒரு பெரிய பதற்றத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் திடீரென உலகச் சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இது மாதிரியான போர் தாக்குதல் போன்ற விஷயங்கள் நடக்கும் போது தங்கத்தின் விலை உயர்வு நடக்கும் என்று தெரிவித்தார்கள்
அதோடு பங்குச் சந்தை கவீழ்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது. அதனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய விரும்புகின்றார்கள். அதோடு இன்று மாலை தான் அமெரிக்க சந்தை திறப்பதால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்கள். இதனால் தங்கம் வாங்க ஆவலுடன் இருந்து வரும் மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.