புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அகற்றி உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போளிபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி உள்ளனர். இந்நிலையில் அந்த வீடுகளை அகற்றிக் கொள்ளுமாறு கிராம நிர்வாக அலுவலர் சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அகற்றாமல் இருந்துள்ளனர்.
இது பற்றி தாசில்தார் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 5 வீடுகள் மற்றும் அடித்தளம் மட்டும் அமைத்திருக்கும் 4 வீடுகளையும் தாசில்தார் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புடன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். அப்போது வருவாய்த் துறையினருக்கும் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.