Categories
தேசிய செய்திகள்

என் தலைமை பண்பிற்கு மோடி தான் காரணம்….. இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி….!!

பிரதமர் மோடி தான் எனது தலைமை பண்பை வெளிப்படுத்தினார் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன்-2 திட்டம் தோல்வி அடைந்த பொழுது பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய, மற்றும் அன்பு செலுத்திய காட்சிகள் இணையத்திலும் ஊடகங்களிலும் வைரலாக பரவியது. தற்போது இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில்,

சந்திராயன்-3 திட்டத்தை வெற்றியாக கடுமையான முயற்சிகளை தற்பொழுது இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. சந்திரயான்-2 திட்டத்தின் தோல்விக்கு லேண்டர் தரையிறங்கும் போது ஏற்பட்ட தவறுகளே காரணமாக கூறப்படுகிறது என்றும், அந்த கட்டத்தில் தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உடைந்து அழுதபோது பிரதமர் மோடி தட்டிக் கொடுத்து தமது தலைமைப் பண்பை உணர்த்தியதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |