அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் நகர் மன்ற உறுப்பினரின் கணவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டையில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகின்றனர். இவர் 7-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் நகர மன்ற உறுப்பினராக போட்டியிடுகிறார். இவரது கணவரான ராஜசேகர் நேற்று வாக்கு சேகரித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வள்ளியம்மை செட்டியார் தெருவில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த 4 மர்ம நபர்கள் ராஜேந்திரனை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து ராஜேந்திரன் காவல் நிலையத்தில் வேலுச்சாமி, தர்மரா ஜன்,ரேவதி தர்மராஜன் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.