Categories
மாநில செய்திகள்

WOW: தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000?…. வேட்பாளர் சூப்பர் வாக்குறுதி….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை தாக்கம் குறைந்ததை அடுத்து நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் பிப்ரவரி 19 (நாளை) நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். இத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி சார்பாக பல்வேறு பொது கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் நேற்று (பிப்…17) வரை நடைபெற்றது. அப்போது வேட்பாளர்கள் மக்களுக்காக சிறப்பான வாக்குறுதிகளை தெரிவித்தனர். அத்துடன் வேட்பாளர்கள் வாக்காளர்களின் மனதில் இடம் பிடிக்கும் அடிப்படையில் நேரில் சந்தித்தி சால்வை அணிவித்து ஓட்டு கேட்டனர்.

அந்த அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலைநகர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பா.ம.க சார்பாக கலந்து கொண்ட வேட்பாளர் தெரிவித்ததாவது, தான் ஆட்சி அமைத்தால் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் 14, 21 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாணவர்களை கவரும் அடிப்படையில் கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்ட்ம்ப் ஆகிய பொருட்களை வழங்கினர்.

Categories

Tech |