100% பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு நடைபெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் காவல்துறை சார்பாக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி 100% வாக்களிக்க கொடி அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. இதற்கு துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த கொடி அணிவகுப்பு கோணாமேடு பகுதியில் இருந்து புறப்பட்டு காதர்பேட்டை உள்பட 3 சாலைகளில் சென்று நகராட்சி அலுவலகம் முன்பாக முடிவடைந்தது. இதில் 200-க்கும் அதிகமான காவல்துறையினர் கலந்து கொண்டுள்ளனர்.