சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோணம் பகுதியில் இருந்து தேரூர் செல்லும் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அம்மன் கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக இரண்டு பைகளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் தட்டான்விளை பகுதியில் வசிக்கும் பிரபு, சுரேஷ் மற்றும் சுகுமார் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.