காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு ராணுவ தளபதி ஜெனரல் நவரானே பதிலளித்துள்ளார்.
பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் முன்பு இருந்த இடத்திலேயே தொடர்ந்து இயங்கி வருவதாகவும் அவற்றை இந்திய ராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் ராணுவ தளபதி ஜெனரல் அவர் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை குறித்து விமர்சித்த அவர் தீவிரவாதம் என்ற பிரச்சனை புதிதானது அல்ல, பல ஆண்டுகளாக இந்திய வீரர்கள் சந்தித்து வருவது தான் என்று தெரிவித்தார்.
தற்போதைய மத்திய அரசு தீவிரவாதத்தை ஒழிக்க உறுதி கொண்டுள்ளதால் எல்லை தாண்டிய தீவிரவாதம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வது சாத்தியமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு, காஷ்மீரில் தாக்குதல் நடத்தப் படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெனரல் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது என்றார்.