Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என்னை SUSPEND பண்ணிட்டாங்க” ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தபால் நிலைய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |