Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!… தமிழகத்தில் அரசு பேருந்து பயனாளிகளுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. இதனால் தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்ரவரி 19 (நாளை) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேயர் பதவிக்கான தேர்தல் மார்ச் 2ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்கும் அடிப்படையில் (பிப் 19) நாளை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறி செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனை தொடர்ந்து சென்னையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். இதனால் அவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் தேர்தல் தினத்துக்கு முந்தைய இன்று (பிப்..18) கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் திருச்சி, கும்பகோணம், மதுரை உள்ளிட்ட போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இயக்கப்படும் எனவும் பொதுமக்களின் தேவையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |