வழக்குகள் நிலுவையில் இருந்ததால் வாலிபரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மந்தைவெளி தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொடர்ந்து அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் முருகேசன் மீது காவல் நிலையத்தில் 4 சாராய வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது.
இதனையடுத்து அவரது குற்ற செயலை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் படி காவல்துறையினர் தடுப்பு காவல் சட்டத்தில் முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.