கூலித்தொழிலாளி கொலை செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயன் பேட்டை மெயின் ரோட்டில் சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான சவுந்தரராஜனை அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவர் கடந்த 2019-ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக குத்தி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கண்ணனுக்கு 4000 ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.