Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாப்பாடு எடுத்துட்டு வரலையா….? வயலுக்கு வந்த கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள லாடபுரம் 2-வது வார்டில் விவசாயியான முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்தையா தனது வயலுக்கு மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று உணவு மற்றும் குழந்தைகளுக்கு பால் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு முத்தையா மீண்டும் வயலுக்கு வந்துள்ளார். அப்போது வயலில் இருக்கும் கொட்டகையில் ஈஸ்வரி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு முத்தையா அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வயலுக்கு வரும்போது ஈஸ்வரி உணவு மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பாலை எடுத்து வராமல் இருந்துள்ளார். எனவே முத்தையா அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |