Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாடு இந்த பக்கம் வந்துச்சா…? மர்ம நபர்கள் செய்த வேலை…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முத்து நகரில் ராஜவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயபாரதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டுத் திண்ணையில் ஜெயபாரதி அமர்ந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் அங்கு சென்றுள்ளனர். அந்த மர்ம நபர்கள் எங்கள் மாடு இந்த பக்கம் வந்ததே பார்த்தீர்களா? என்று ஜெயபாரதியிடம் கேட்டுள்ளனர். அப்போது மாடு எதுவும் நான் பார்க்கவில்லை என ஜெயபாரதி கூறியுள்ளார்.

இதனையடுத்து சற்றும் எதிர்பாராத நேரத்தில் மர்ம நபர்கள் ஜெயபாரதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஜெயபாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |