பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயத்திற்கு பயன்படும் பிளாஸ்டிக் பைப்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் 60-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி விழுந்தது. இதனால் தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.