Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட பெண்…. வாலிபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலைத்தில் ஒப்படைத்துவிட்டனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள சொக்களிங்க நகர் 6-வது தெருவில் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பிரியதர்ஷினியை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.

இதனை பார்த்ததும் பிரியதர்ஷினி சத்தம் போட்டதால் பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் முத்துராமலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் கதிரவன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கதிரவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |