Categories
கிரிக்கெட்

13 பந்துகளில் அரைசதம்…. “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒப்பந்தமான வீரர்”…. மாஸ் காட்ட போகும் கொல்கத்தா அணி….!!!!

வங்கதேச பிரிமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த  லீக் சுற்றில் அனைத்தும் நடந்து முடிந்து குவாலிபையர்  தொடங்கப்பட்டு விட்டன. இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் சாட்டோகிராம்  சாலஞ்சர்ஸ், விக்டோரியன்ஸ்  அணிகள் மோத உள்ளன. இதில் முதலில் சட்டோகிரம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய சாட்டோகிராம்  அணியில் அதிகபட்சமாக மெகிடி ஹாசன் 44 (38), அக்பர் அலி 33 (20) ஆகியோர் பெரிய ஸ்கோர்  அடித்துள்ளனர். மேலும் மற்றவர்கள் சிறப்பாக செயல்படாததால் இந்த அணி 19.3 ஓவர்களில் முடிவில் 148/10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இலக்கை துரத்தி களமிறங்கிய டொமிலா அணியில்  ஓபனர் கிரேடன் டப்  கொடுத்துள்ளனர். இதைதொடர்ந்து சுனில் நரைன் வெறும் 13 பந்துகளில் அரை சதம் அடித்து அதிவேகமாக அரை  சதமடித்த இரண்டாவது வீரர் என சாதனை படைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 16 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட 57 ரன்கள் அடித்து, நரைன் ஆட்டமிழந்துள்ளார். நரைன் எதிர்கொண்ட 16 பந்துகள் (6,4,4,6,6,4,6,0,4,6,1,6,0,4,W). இதில் மூன்று பந்துகளில் மட்டுமே டாட் பால்கள் ஆகும். இவரின் அதிரடி  காரணமாக கொமில்லா அணி 6 ஓவர்களில் 74 ரன்களை குவித்து அசத்தியது. இதனைத் தொடர்ந்து ஃபாஃப் டூ ப்ஃளசி  30 (23), மொயின் அலி 30 (13) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், கொமில்லா அணி 12.5 ஓவர்களில்149/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதில் சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |