Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. இனி கவலையில்லை வந்தாச்சு புது ரூல்ஸ்…. ரயில் பயணிகள் ஹேப்பி…!!!!

ரயில்  பயணிகளுக்காக புதிய நடைமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இரவு நேரங்களில் ரயிலில் பயணம் செய்யும்போது சில தொந்தரவுகளை பயணிகள்  சந்தித்திருப்பார்கள். இரவில் பயணம் செய்பவர்கள் சக பயணிகளால் அடிக்கடி தூங்க முடியாமல் அவதிப்படுவதாக ரயில்வே வாரியத்துக்கு புகார்கள் வந்து கொண்டிருந்தது. தற்போது அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைப்படி சகபயணிகள் மொபைலில் சத்தமாக பேசவும், பாடல் வைத்து கேட்கவும் அனுமதி கிடையாது. அவ்வாறு தொந்தரவு செய்பவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விதி முறைப்படி பயணிகள் தரப்பில் இருந்து புகார் வந்தால் ரயில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இது அனைத்து மண்டலங்களுக்கு  இந்த விதியை உடனடியாக அமல்படுத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதில்  60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனியாக பயணிக்கும் பெண்கள் போன்றவர்களுக்கு ரயில்வே ஊழியர்கள் உடனடி உதவி வழங்குவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறை இரவு 10 மணிக்கு அமலுக்கு வரும் இரவு நேரங்களில் முடிந்தவரையில் அனைத்து விளக்குகளையும் அணைக்கவேண்டும். இதன் காரணமாக சக பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கும், சோதனை ஊழியர்கள், ஆர். பி. எப் எலக்ட்ரீசியன், கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் இரவில் அமைதியாகத் தூங்கும் வேலை செய்யவும் இந்த புதிய விதிமுறையை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |