Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கான சூப்பரான திட்டம்…. பயன்கள், வருமானம் எவ்வளவு? முழு விவரம் இதோ…!!!

பணத்தை சேமிக்க சிறந்த திட்டங்களில் ஒன்றாக போஸ்ட் ஆபீஸ் திட்டம் செயல்படுகிறது. மாத வருமானத் திட்டத்தின் கீழ் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். மேலும் இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் அதில் கிடைக்கும் வட்டியை  குழந்தையின் கல்வி கட்டணத்திற்கு  செலுத்தலாம். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூபாய் 1000ரூ  முதலீடு செய்யலாம்.

அதிகபட்சமாக4.5  லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும் தற்போது வட்டி விகிதம் 6.6 சதவீதம் ஆகும். இத்திட்டத்தில் முதிர்வு5 ஆண்டுகள் ஆகும். ஒரு குழந்தைக்கு 10 வயது இருந்து இரண்டு லட்சத்தை அவரின் பெயரில் டெபாசிட் செய்தால் ஒவ்வொரு மாதமும் வட்டி மட்டும் 1,500 ரூ கிடைக்கும் 5 ஆண்டுகளில் இது  60,000 ரூபாயாக  மாறும். மேலும் கடைசியாக 2 லட்சம் ரூபாயாக திரும்ப கிடைக்கும்.

இது குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவியாக இருக்கும். இந்த திட்டத்தில் 3.5 லட்சம்  டெபாசிட் செய்தால் தற்போதைய வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும்1,925 ரூபாய் கிடைக்கும். இதில் அதிகபட்சமாக 4.5 லட்சம் டெபாசிட் செய்தால் ஒவ்வொரு மாதமும் 2,470 ரூபாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |