Categories
அரசியல்

வேணும்னா ரெண்டாவது…. கல்யாணம் பண்ணிக்கோங்களேன்….கடம்பூர் ராஜூ சர்ச்சை பேச்சு…!!

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடம்பூர் ராஜு கோவில்பட்டி பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “அதிமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியது. சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற திமுக பல சூழ்ச்சிகளை செய்து பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி எப்படியோ வென்று விட்டது. அதிமுகவிற்கு மக்களின் மன நிலைமை தெரியும். ஆனால் முதல்வர் ஸ்டாலினுக்கு மக்களின் மனசு தெரியாது. அவருக்கு ஜாலியாக சைக்கிள் ஓட்டத் தான் தெரியும். நாங்களும் தான் தினமும் டீ குடிக்கிறோம். உடற்பயிற்சி செய்கிறோம். அதை எல்லாம் போட்டோ எடுத்து வெளியிட்டுக் கொண்டா இருக்கிறோம்.

மக்களுக்கு தேவை நல்ல ஆட்சி நல்ல திட்டங்கள் தானே தவிர இது போன்ற போட்டோக்கள் இல்லை. முதல்வர் என்பவர் நல்ல திட்டங்களை அமல்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு சினிமாவிற்கு போஸ் கொடுப்பது போல போஸ் கொடுத்து போட்டோ எடுத்து வெளியிட்டு வருகிறார். இது ஒரு நல்ல முதல்வருக்கு அழகல்ல. இப்படியெல்லாம் செய்து ஸ்டாலின் தான் இளமையாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார். வேண்டுமென்றால் துர்கா ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தால் முதல்வர் இன்னொரு திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். உதயசூரியன் எப்போதும் மக்களை சுட்டெரிக்கத்தான் செய்யும். பசுமையான இலைகளை கொண்ட மரம் தான் மக்களுக்கு குளிர்ச்சி தரும்.!” இவ்வாறு அவர் பேசினார்.

Categories

Tech |