முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் அதீத ஞானம் கொண்டவர். அவரது ஆட்சி காலம் தான் இந்திய பொருளாதாரத்தின் பொற்காலம் எனக் கூறலாம். ஆனால் அவர் பதவியிலிருந்து இறங்கியதில் இருந்து நாட்டு நடப்பு மற்றும் இந்திய அரசியல் தொடர்பாக எதுவும் பேசுவதில்லை. இதற்கு காரணம் அவரின் வயது முதிர்ச்சி என கூட சிலர் கூறினர். அன்மையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது மீண்டு வந்துள்ளார். ஆனால் அவர் மோடி பிரதமராக பதவியேற்கும் போது சொன்ன ஒரு வார்த்தை இப்போதுவரை பிரபலமாக உள்ளது. அது என்னவென்றால் ‘Modi as PM will be a disaster for india’ என்பதாகும் இந்த வார்த்தையை நெட்டிசன்கள் அவ்வப்போது இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் மன்மோகன் சிங் தற்போது பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மன்மோகன் சிங் பிரதமர் மோடியை சரமாரியாக விமர்சித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “நாட்டில் 7 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மக்கள் வேலைவாய்ப்பு இன்மையாலும் பணவீக்கத்தாலும் அவதியுற்று வருகின்றனர். ஆனால் மோடி தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் மாறாக முதன்முதலாக பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு தான் அத்தனை தவறுக்கும் காரணம் என கூறி வருகிறார். இவ்வாறாக வரலாற்றில் பிழை கண்டுபிடிப்பது ஒரு நல்ல பிரதமருக்கு அழகல்ல. நான் பிரதமராக இருந்தபோது இந்திய வரலாற்றில் ஒருபோதும் குறைகூறியதுமில்லை. தேசத்தின் கௌரவத்தை விட்டுக் கொடுத்ததும் இல்லை எல்லைக்குள் ஊடுருவும் சீனாவை கட்டுப்படுத்தாமல், இதுகுறித்து வெளியிடப்படும் செய்தியை மட்டும் கட்டுப்படுத்துகிறார்கள். வெளியுறவு கொள்கையை கட்டாயமாக கடைபிடிப்பதும் பிரியாணி சமைத்துக் கொடுத்தாலும் ஊஞ்சலில் ஒன்றாக ஆடுவதாலும் எல்லாம் முடிந்து விடாது,
இந்த அரசு பிரித்தாளும் கொள்கையை கடைபிடிக்கிறது. பிரித்தாலும் கொள்கை முதலில் இது மிகவும் ஆபத்தானது. பாஜாக என்னை எப்போதுமே வலுவற்றவன், ஊமையாக இருப்பவன், ஊழல்வாதி என்றெல்லாம் விமர்சித்து இருக்கிறது. அதையெல்லாம் நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால் வரலாற்றை குறை கூறுவதை என்னால் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.” என்று கூறினார்.