Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு …!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

வடக்கு உள் தமிழக மாவட்டங்களில் இருந்து கர்நாடக வரையிலான நிலப்பரப்பில் வளிமண்டலத்தில் காற்றழுத்த சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது .

Image result for rain photos

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ,நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பர்லியாறில் 4செ .மீ வும் ,திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 3 செ .மீ மழை பதிவாகியுள்ளது .

Categories

Tech |