Categories
தேசிய செய்திகள்

அடடே! வாட்சப் மூலம் பென்ஷன் பணம்…. வெளியாகும் செம சூப்பர் திட்டம்…!!!

பின் பாக்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் வாட்சப் மூலம் பென்ஷன் பரிசாக அளிப்பதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பென்ஷன் திட்டங்களில் இணைய இன்னும் எளிமையான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன்படி வாட்சப் மூலம் பென்ஷன் பரிசாக அளிப்பதற்கான திட்டத்தை பின்பாக்ஸ் சொல்யூஷன்ஸ் (pinBox Solutions)  நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்சப் வாயிலாக அமைப்புசாரா தொழிலாளர்கள்மற்றும்  வீட்டு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு Gift a Pension  என்ற  திட்டத்தின் மூலம் பென்ஷன் பரிசாக அளிக்க முடியும்.

இதைப் போன்று NPS பென்ஷன் திட்டத்தை எந்த ஒரு நபருக்கும் பரிசாக அளிக்க முடியும் மேலும் இதற்காக பின் பாக்ஸ் நிறுவனம் HDFC Pension Fund நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது. இத்திட்டத்தில் இணைய வாட்சப்பில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு, பதில் அளித்து விட்டால் போதும். இதற்கான கணக்கு உடனடியாக தொடங்கி விடலாம். இதனைத் தொடர்ந்து பென்ஷனை பரிசாக பெறும் நபரின் வங்கிக் கணக்கும், மொபைல் எண்ணும் ஆதார் கார்டில் இணைக்கப்பட்டு இருந்தால் மட்டும் போதும்.

இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை பற்றி பின் பாக்ஸ் நிறுவனத் தலைவர் கவுதம் பரத்வாஜ் கூறியுள்ளதாவது, இத்திட்டம் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷனை எளிமையான முறையில் பரிசாக அனுப்பலாம். மேலும் நமது விருப்பம்போல் ஒரு மாதத்திற்கு ரூ .1000, இன்னொரு மாதத்திற்கு ரூ.3000 என பென்ஷன் திட்டத்துக்கு பங்களிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். எனினும் இந்த தேசிய பென்ஷன் திட்டத்தில் கணக்கு தொடங்க ரூ.500 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நமது பங்களிப்பை யாருடைய NPS பென்சன் கணக்கிற்கு வேண்டுமானாலும் செலுத்த முடியும். எனவே அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் மிகுந்த பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |