தமிழக அரசு, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வீட்டு வாடகை படி உயர்வு, அகவிலைப்படி உயர்வு போன்றவைகள் அண்மையில் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது. அதாவது அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கி வருகிறது.
இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அரசு ஊழியர்கள் குறைவான தொகையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் புதிய நடைமுறையாக மருத்துவ காப்பீடு கட்டணம் ரூ.180-லிருந்து ரூ.300-ஆக அதிகரிக்கப்பட்டது. மேலும் 2025 ஆம் ஆண்டு வரை இந்த மருத்துவ காப்பீடு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அரசு ஊழியர்கள் கொரோனாவுக்கும் சிகிச்சை அளிக்க கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி ஓய்வூதியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் கொரோனா சிகிச்சைக்கான காப்பீடு தொகை ரூ.10 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு கொரோனா சிகிச்சைக்கான தொகை ரூ.10 லட்சத்திற்கும் கூடுதலாக வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்த அறிவுறுத்தல்கள், மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான யுனைடெட் இந்தியா நிறுவனங்களிடமிருந்து வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும். தமிழக அரசின் இந்த அறிவிப்பால் தற்போது அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.