Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு…”சலுகைகள் கிடைத்து சந்தோசம்”…. அனுகூலமான பலன்….!!!

மிதுன ராசி அன்பர்களே…!! இன்று சலுகைகள் கிடைத்து சந்தோசம் அடையும் நாளாக இருக்கும். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று கொடுத்த வேலையை கச்சிதமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண வரவு வந்து சேரும். மனநிம்மதி கொஞ்சம் குறையலாம். வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. அதேவேளையில் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது ரொம்ப நல்லது. பொறுமையாக இருங்கள். காரியங்கள் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும். இன்று திருமண முயற்சிகளை மேற்கொள்வதாக இருந்தால் ரொம்ப சிறப்பாக இருக்கும். நல்ல அனுகூலமான பலன்களை அடைய கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |