கர்நாடகா அமர்வு உயர்நிலை தீர்ப்பாணையத்தின் படி சிறப்பு விரிவுரையாளர் பணி மூலம் கிடைத்த வருமானத்துக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) என்ற வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சிறப்பு விரிவுரையாளர் (Guest Lecturer) பணி மூலம் கிடைத்த வருமானத்துக்கு வரி விதிக்கப்படுமா? என்பதை தெளிவுபடுத்த, உயர்நிலை தீர்ப்பாணையத்தின் கர்நாடக அமர்வில் சாய்ராம் கோபாலகிருஷ்ண பட் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனை அடுத்து இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தொழில் மற்றும் தொழில்நுட்ப சேவைகளில் சிறப்பு விரிவுரை வருவதாகவும், இதற்கும் ஜிஎஸ்டி வரியாக 18% விதிக்கப்படவேண்டும் என உயர்நிலை தீர்ப்பாணையம் அறிவித்துள்ளது.
பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் வல்லுநர்கள் அறிஞர்கள் என பல்வேறு தரப்பினரும் சிறப்பு விரிவுரையாளராக, அவ்வப்போது செய்து, தங்களது அறிவு மற்றும் அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றன. எனவே சிறப்பு விரிவுரையாளராக பணிபுரியும் நபர்களின் விற்றுமுதல் (turnover) ரூபாய் 20 லட்சத்துக்கு மேல் இருந்தால் அவர்களுடைய வருமானத்துக்கு 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என தீர்ப்பு வெளியாகி உள்ளது.