தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் 8-ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கான ஊரக திறனாய்வு தேர்வானது வருகிற 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 21ம் தேதி வெளியிடப்படும்.
இந்த பட்டியலை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதையடுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 21ம் தேதி பிற்பகல் முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அதன்பின் ஹால் டிக்கெட்டை மாணவர்களுக்கு முன்பே வழங்கி தேர்வுக்கான அறிவுரையை வழங்க வேண்டும். அதில் மாணவர்களின் பெயர் மற்றும் பிறந்த தேதியில் திருத்தம் இருந்தால், அதனை சிவப்பு நிற மையால் அழித்து சரியான பதிவை குறிப்பிட்டு, தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பமிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.