தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (பிப்…19) நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள் இன்று பயிற்சி முடிந்ததும் நேராக ஓட்டுப்பதிவு மையங்களுக்கு செல்ல இருக்கின்றனர். இதன் காரணமாக 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்தல் பணிக்காக செல்ல இருப்பதால் அந்த பள்ளிகளுக்கும், ஓட்டுச்சாவடியாக இயங்கும் பள்ளிகளுக்கும் இன்று (பிப்..18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிராமப் புறங்களில் வேலை பார்க்கும் ஆசிரியர்களில், நகர்ப்புறங்களில் ஓட்டுரிமை இருப்பவர்களுக்கு, நாளை (பிப்…19) ஓட்டு போடுவதற்காக தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையில் தேர்தல் நடக்காத கிராமப்புற பள்ளிகள் வழக்கம் போன்று செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.