Categories
மாநில செய்திகள்

நகைப்பிரியர்களுக்கு அதிரடி ஷாக்…. உயர்ந்தது தங்கம் விலை…. இன்றைய விலை நிலவரம் இதோ…..!!!!!

சென்னையில் நேற்று (பிப்…17) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 376 உயர்ந்து, ரூபாய் 37,680க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூபாய் 47 உயர்ந்து ரூபாய் 4,710க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 68க்கு விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று(பிப்..18) கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 4742 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 16 உயர்ந்து ரூபாய் 37936 என விற்பனையாகி வருகிறது. இன்று 24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5108 என்றும் ஒரு சவரன் ரூபாய் 40864 என்றும் விற்பனையாகி வருகிறது. அதேபோன்று வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 68.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 68500 எனவும் விற்பனையாகி வருகிறது.

Categories

Tech |