சட்டவிரோதமாக 1 கிலோ 250 கிராம் கஞ்சா கொண்டு வந்த 3 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாங்குளம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 3 பெண்களை சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் நாச்சியார், மீனாட்சி, சமுத்திர வள்ளி என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.