மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பள்ளியின் முன்பு ஆரம்பம்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உபரி ஆசிரியர்களை நிர்ணயிக்க கடந்த 1.8.2021- ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது.
ஏனென்றால் கொரோனா பாதிப்பு காலமாக இருந்ததால் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்த நிலையில் கடந்த 1.11.2021 அன்று பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டு என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.