Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு…”உறவினர்கள் உதவிக்கரம்”….. மனம் கவலை தீரும்…!!

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாளாக இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வீட்டை பராமரிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். பெற்றோர் மீது பிரியம் கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

காரியத்தில் ஓரளவு அனுகூலம் இருக்கும். மனம் கவலை தீரும். சமயோசிதம் போல் செயல்பட்டு காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஆனால் வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |