Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஒரு வசதியும் இல்ல… “அந்த பஞ்சாயத்துல சேருங்க”… கஞ்சி குடித்து போராட்டம் நடத்திய மக்கள்..!!

நெல்லையில்  அடிப்படை  வசதி  கிடைக்காததால்  மக்கள்  கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டம் நடத்தினர். 

நெல்லை  மாவட்டத்தில்   உள்ள  வள்ளியூர் யூனியனில்  சிதம்பரபுரம்  மற்றும்  யாக்கோபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட  1, 2-வது வார்டு பகுதியில்  சுமார் 100-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள்  உள்ளனர். கடந்த உள்ளாட்சி தேர்தலின்   போது  சிதம்பரபுரம்  மற்றும்  யாக்கோபுரம் வாக்காளர்களை  ஆவரைகுளம் மற்றும் பழவூர் பஞ்சாயத்துகளில்   இணைத்துள்ளனர். ஆனால்  அப்போது  எதிர்ப்பு   தெரிவித்த பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து  விட்டனர்.

இந்த  நிலையில்  வாக்காளர்களுக்கு  அவர்கள்  குடியிருக்கும் பகுதிகளில்  தெருவிளக்கு  மற்றும் குடிநீர் போன்ற பொதுவான  அடிப்படை வசதிகளும்,  100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில்  வேலைவாய்ப்பு    வழங்கப்படவில்லை என்று  சொல்லப்படுகிறது.

இதன்  காரணமாக   தங்களை மீண்டும் சிதம்பரபுரம் – யாக்கோபுரம் பஞ்சாயத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து  கடந்த 15-ந்தேதி சிதம்பரபுரம் மெயின் ரோட்டில் முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கிய  நிலையில்,   3-வது நாளான நேற்று  அனைவரும் கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரபுரம் பஜாரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு  இருந்தன.

Categories

Tech |