தமிழகம் முழுவதும் நாளை சென்னை, வேலூர், கோவை, மதுரை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அந்தவகையில் வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சியில் இருக்கும் 60 வார்டுகளில் 58 பேர் அதிமுக சார்பாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அங்குள்ள 11 வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிடும் சுகேந்திரன் என்பவரை கடந்த சில நாட்களாகவே அக்கட்சியினர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளதால் அவரை காணவில்லை என்று அதிமுகவினர் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே 57 வார்டுகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவரை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.
மேலும் இதற்கு காரணம் அமைச்சர் துரைமுருகன் என்பவர் தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வேட்பாளர் சுகேந்திரனை அமைச்சர் மிரட்டினார் என்பதனால் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என்றும், அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து மிரட்டப்படுவதாகவும், காவல்துறை அதிகாரிகளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.