Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…”உடல் சோர்வடைய நேரிடலாம்”.. வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது…!!

தனுசு ராசி அன்பர்களே…!!  இன்று முன்கோபத்தால் முட்டுக்கட்டைகள் ஏற்படும் நாளாக இருக்கும். வியாபார விரோதங்கள் உருவாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். பயணங்களை மாற்றி அமைக்க வேண்டும். இன்று அலுவலகத்தில் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரிடலாம். மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது வேண்டாத பிரச்சினை தலை தூக்கலாம்.

யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. பொறுமையாக இருங்கள். காரியங்களைச் சாதித்துக் கொள்ளுங்கள். அதேபோல முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், ரொம்ப நிம்மதியாக இருப்பீர்கள். எதிரிகளிடம் பேசும்பொழுது ரொம்ப கவனமாக பேசுங்கள். அதேபோல் பழைய பாக்கிகள் வசூல் செய்யும் போதும் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கடினப்பட்டுதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். கடினப்பட்டு படியுங்கள் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |