Categories
சினிமா தமிழ் சினிமா

சப்பா…!! என்ன இப்படி பண்றாங்க…. முரண்டு பிடிக்கும் தனுஷ்- ஐஸ்வர்யா…. இதுக்கு ஒரு முடிவே இல்லையா….!!!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் போட்டி போட்டு கொண்டு ஒவ்வொன்றாக செய்து வருவதால் மீண்டும் சேர வாய்ப்பில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். 

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டனர். இவர்களின் விவாகரத்து அறிக்கைக்கு பிறகு ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டிருக்கும் பொது அவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா காதலர் தினத்தை முன்னிட்டு ரொமான்டிக் பாடல் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகி வரும் ‘வாத்தி’ அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘நானே வருவேன்’ போன்ற படங்களின்  படப்பிடிப்பில் கலந்து கொண்டார். நடிகர் தனுஷ் தனது சோகங்களை மறக்க அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆவதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் காதலர் தினத்தன்று தனுஷின் மாறன் படத்தின் ரொமாண்டிக் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில்  வெளியாகி வைரலானது. அதேபோல் ஐஸ்வர்யாவின்  ‘முசாபீர்’ ஆல்பம் பாடலின் ப்ரோமோ வெளியானது.

தனுஷ், ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு இது வரை சமூக வலைத்தள பக்கத்தில் பெயரை மாற்றாமல் இருந்த ஐஸ்வர்யா தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நேற்று தனது மகன் யாத்ராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தனுஷ் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்த காரணத்தினால் தனது புதிய ஆல்பம் பாடலுக்கு தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இவ்வாறு இருவரும் வீம்புக்கு போட்டி போட்டு கொண்டு இருப்பதால் மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பு பேசி வருகின்றனர்.

Categories

Tech |