தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளுக்கும், குளச்சல், குழித்துறை, பத்மநாபபுரம், கொல்லங்கோடு நகராட்சியில் 99 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் உள்ள 828 வார்டுகளுக்கும் என மொத்தமாக 979 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 975 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில்4366 வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர்.
இந்நிலையில் தேர்தலுக்கான பணியில் 4,500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கு நாளை மூன்றாம் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் 233 வாக்குச்சாவடிகள் தயார் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இதில் 34 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் முழுதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.