கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசல்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கவுசல்யா வீட்டின் அருகாமையில் இருக்கும் ரோஷன் என்ற சிறுவனுடன் பேசிக் கொண்டு சென்று கொண்டிருக்கும் போது அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதனை அறிந்த கிராம மக்கள் அங்கு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் கவுசல்யா தண்ணீரில் தத்தளித்து பரிதாபமாக மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவுசல்யாவின் உடலை மீட்டுள்ளனர்.