நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழில் தெய்வத்திருமகள், சிங்கம், என்னை அறிந்தால் ,பாகுபலி 1, 2 என்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்து பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
மேலும், இவரின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவலும் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், அனுஷ்கா ஷெட்டி சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் திரையுலகில் ”நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது” எனவும், ஆனால் ”எனக்கு அந்த மாதிரி எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை” எனவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.