Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வாக்காளர் அட்டையை ஒப்படைப்போம்” கிராம மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நாகல்நகர் சந்தை ரோடு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆர். எஸ் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தங்கள் பகுதியை சேர்ந்த 183 நபர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்குமாறு தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் வாக்காளர் அட்டையுடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

இதனை அடுத்து வாக்காளர் அட்டையை திரும்ப ஒப்படைக்க போவதாக கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேல் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |