சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அடரி கிராமத்தில் 4 வயது சிறுமி தனது பாட்டியுடன் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் முதியவர் அம்சவேல் என்பவர் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதை யாரிடமும் சொல்லக் கூடாது என முதியவர் மிரட்டியதாக சிறுமி தனது தாயிடன் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் இது பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அம்சவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.