தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த குழுவானது தற்போது பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலம், நீர்வளம் மாசடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கழிவுகளை கையாண்ட முறைகளில் பல்வேறு தவறுகள் உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.