பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் ரோடு தெருவில் பார்த்தசாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுபிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மஞ்சுபிரியா நந்தகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். அதன்பின் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மஞ்சுபிரியா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பாக மஞ்சுபிரியாவின் கணவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அப்போது விசாரணைக்காக நீதிமன்றம் சென்று வந்த நிலையில் கடுமையான மன உளைச்சலில் இருந்த மஞ்சுபிரியா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து மஞ்சுபிரியாவின் தாய் சரோஜாதேவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.